வெள்ளி, ஜூன் 11, 2021

பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்

 இன்றிரவு, அவர்கள் உங்களுக்கு அரக்கர்களின் கதைகளைச் சொல்வார்கள்

ஒரு கண்கள், மூன்று கண்கள் மற்றும் அரிதாக அவ்வப்போது இரண்டு கண்கள்

ஞாயிற்றுக்கிழமை உங்கள் நோட்புக்கில் நீங்கள் வரைந்ததைப் போல

அவர்கள் உங்களுடன் பிங்-பாங் விளையாட வேண்டும்

முதலில் அவர்கள் பிங் செய்கிறார்கள், பின்னர் நீங்கள் பாங் செய்கிறீர்கள்

பின்னர் உள்ளது

பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்

நித்தியத்தின் இறுதி வரை அல்லது சலிப்பின் எல்லை வரை

எது முதலில் வருகிறதோ

அவர்கள் சொல்கிறார்கள்: அரக்கர்கள் நட்பாக இருக்கிறார்கள், அவர்கள் சொல்கிறார்கள்: அவர்கள் உங்களை சிரிக்க வைக்கிறார்கள்

நீங்கள் அவர்களைக் காதலிக்கச் செய்யுங்கள், நீங்கள் பயப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் சொல்கிறார்கள் –

இருண்ட தெருக்களில் நடக்க இரண்டு முறை நினைத்தால், விளையாட்டு உங்களுக்காக அல்ல

அரக்கர்கள் கண் சிமிட்டுகிறார்கள் மற்றும் அரக்கர்கள் நாக்குகளை நீட்டுகிறார்கள்

அல்லது அரக்கர்கள் வாயைத் திறந்து உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்

அரக்கர்களை புறக்கணிக்க இது ஒரு நல்ல நேரம் என்று நீங்கள் நினைக்கும் போது

உங்கள் அசாதாரண வாழ்க்கைக்கு நீங்கள் திரும்பி வருகிறீர்கள்

பின்னர் அவர்கள் பிங் மற்றும் நீங்கள் பாங்

பின்னர் உள்ளது

பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்-பிங்-பாங்

நித்தியத்தின் இறுதி வரை அல்லது சலிப்பின் எல்லை வரை

எது முதலில் வருகிறதோ


திங்கள், ஜூன் 07, 2021

கட்டவிழ்ப்பு

தெரிதா 
பூக்களையும் 
பூவுக்கும் அதன் பொருளுக்கும் 
இடையிலான பாலத்தையும் 
கட்டிக் கட்டி அவிழ்க்கிறார்  
(உடைக்கவும் உடைக்கிறார்)
தெரிதா, தெரிலியா?

ஞாயிறு, ஜூன் 06, 2021

இருத்தல் – அப்பாடா

டீவி-யில் சினிமா காமெடி –
கல்யாண வீடு: " சாப்பிட்டுவிட்டுப் போங்கள்!
வயிறு சரி இல்லையா? சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டுப் போங்கள்!"

சிரிக்க வேண்டும் போலிருக்கிறது –
ஆனால் சுற்றிலும் நண்பர்கள் –
இன்டலக்சுவலான அவர்களின் நடுவில்
அத்தனை இன்டலக்சுவலாய் இல்லாத இந்தக் காமெடிக்கு
சிரிப்பது உசிதமாய் இருக்குமா?
(அந்தச் சிந்தனையில் அத்தனை அடுக்குகள் இல்லை, இல்லையா?)
சிரித்தால் மதிப்பு குறையுமா – அவர்கள் என்ன நினைப்பார்கள்?
இப்படியெல்லாம் எண்ணங்கள் – சிரிக்க வேண்டிய கணமோ
மெல்ல நழுவி விடுகிறது (மைண்ட் வாய்ஸ்: "த moment இஸ் gone!")

சட்டென மின்னலாய் வெட்டும்
இருத்தலியல் (ஆஹா, வெற்றி, வெற்றி!) கருத்து

(நகுலனும் கூட நடந்து வருகிறார் ஒரு கட்டு வெற்றிலையும், புகையிலையும்,
சிகரெட்டும், வாய் கழுவ ஒரு செம்பில் தண்ணீரும் எடுத்துக்கொண்டு
தன் நண்பருடன் பேசிக்கொண்டே – இந்தச் சாவிலும்
ஒரு சுகம் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு – இருப்பதற்கென்று தான்
வருகிறோமோ?)

அடுத்த சில கணங்களை – காம்யூவும்
உச்சரிப்புக்கு சரியாய் எழுத முடியாத பெயர் கொண்டதால் 'ழ'வுடன்
எழுதப்படும் ழான் பால் சார்த்ருவும் சிமோன் து பூவோவும்
(ஃப்ரெஞ்சுப் பெயர்களை இன்டலக்சுவல் வட்டங்களில்
சரியாய் உச்சரிப்பது ரொம்ப முக்கியம் அமைச்சரே!)
புரிந்தும் புரியாமலும் உருப்போட்ட செகண்ட்-ஹேண்ட் கருத்துக்களும்
புரிந்து கொண்ட பாவனைகளுடன் இருத்தலியக் கொட்டேஷன்களும்
நிரப்புகின்றன – அடடா! எவ்வளவு இன்டலக்சுவல் களையெடுப்பும்
ஆணி புடுங்கலும் கழிவு வெளியேற்றமும்!
எல்லோருக்கும் நிறைவாய் இருக்கிறது!

அதே சினிமா காமெடி
"எல்லோரும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்கள்!
மனமோ வயிறோ சரியில்லையா?
இருத்தலியலை நினைவில் கொள்ளுங்கள் –
சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டுப் போங்கள்!"

இப்போது இது இருத்தலியலுடன் இணைந்து (அட, இகர மோனை!
இந்த இகர முதல் வார்த்தைகள் நகுலனுக்கு உவகை ஊட்டுமா?)
வேறுவிதமாக, பொருள்-கனம் மிகுந்ததாய் தோன்றுகிறது

இன்டலக்சுவல் வட்டத்தில் இப்போது சிரிப்பு.

அப்பாடா!

திங்கள், மே 31, 2021

பூனை, நான் அதை அழைத்தேன் என்று நினைக்கிறேன்

நான் அதை பூனை என்று அழைத்தேன் என்று நினைக்கிறேன் - நான் அதை பூனை என்று அழைத்தேன் என்று நினைக்கிறேன் - நான் அதை பூனை என்று அழைக்கப் பழகிவிட்டேன் என்று நினைக்கிறேன் - நான் அதை ஒரு பூனை என்று அழைத்தேன் என்று நினைக்கிறேன் - நான் அதை ஒரு பூனை என்று நினைத்தேன் - நான் நினைக்கிறேன் நான் அதை ஒரு பூனையாகப் பயன்படுத்த அழைத்தேன் - நான் அதை ஒரு பூனை என்று அழைக்கப் பழகிவிட்டேன் என்று நினைத்தேன் - நான் அதைப் பயன்படுத்திய பூனை என்று அழைக்கப் பழகிவிட்டேன் என்று நினைத்தேன், நான் அழைத்ததைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லலாம் அந்தக் காலத்துக்கும் சந்ததியினருக்கும் அந்த நேரத்தின் லேபிளுடன் அல்லது இல்லாமல் எங்களுக்கிடையில் இருந்த விஷயம், நாங்கள் ஒரு பெயரை விரும்பவில்லை என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும், நாங்கள் ஒரு பெயரைப் பார்க்கவில்லை என்று நினைத்துப் பழகிவிட்டோம் என்று நினைக்கிறேன் அதுவும் நாங்கள் ஒரு பெயரை விரும்பவில்லை என்று நினைத்துப் பழகிவிட்டோம் என்று நாங்கள் நினைத்தோம் என்று நினைக்கிறேன், இப்போது நான் நினைத்ததைப் போலவே நினைக்கிறேன், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெயரை நாங்கள் உண்மையில் விரும்பவில்லை என்று நாங்கள் நினைத்தோம் என்று நினைத்தோம். பூனை இறந்துவிட்டது - அல்லது உண்மையில் செய்தது, பூனை இறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன் அல்லது பூனை எப்போதும் உயிருடன் இருக்கும் என்று நான் நினைத்தேன், நான் மெல்லியேன் பயன்படுத்தப்பட்ட பூனை என்றென்றும் உயிருடன் இருக்கும் என்றும், பயன்படுத்துவதும் பயன்படுத்தப்படுவதும் சிந்திப்பதும் மற்றும் நாம் எதைப் பற்றி சிந்திக்கப் பயன்படுத்தினோம், எல்லா நேரத்திலும் கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும்

புதன், மே 26, 2021

தலைகள்

ஒரு நாய் போல் தங்களைத் தாங்களே பிடிக்கும் பாம்புகளின் வால்களுக்குப் பிறகு கனவுகளில் பதில் சங்கிலிகளைத் துரத்துகிறது மனதில் விழித்திருப்பது மனம்-கால்கள் மனதில்லாமல், இனிமையின் மாற்று சுவிட்ச் மற்றும் ஊதா பச்சை திராட்சைகளின் புளிப்பு ஆகியவற்றை பச்சையம் மற்றும் பச்சை நிற இலைகள் கொண்ட ஊதா பச்சை திராட்சைகளின் புளிப்பு ஆக்ஸிஜன் தமனிகள் இல்லாமல் இரத்தத்தை சுமந்து செல்லும் ஊதா நரம்புகள் சிவப்பு நிறத்தில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த தமனிகள் நரம்புகளை விட தடிமனாகவும், ரத்தம் மெக்னீசியாவின் நீரை விட தடிமனாகவும் அமர்ந்திருக்கும். ஒரு கிட்டார் மற்றும் ஹார்மோனிகாவுடன் ஒரு ராம்ப்ளரின் நள்ளிரவு சத்தத்தின் கவனமாக சத்தம் மற்றும் ஒரு கோட் அணிந்த ஒரு மனிதன் மற்றும் ஒரு பூல் தொப்பி பற்கள் போன்ற பெரிய முத்து பூண்டு மற்றும் பீன்ஸ் போன்ற சிற்றுண்டி ரொட்டி துண்டுகள் மீது சிற்றுண்டி ரொட்டி வெண்ணெய் பக்கமாக பறக்கும் மழை பெய்யும் காற்று மேகங்களின் நடுவே மற்றும் லாபத்தின் மீன்பிடி வலைகள் மற்றும் எலிகளின் இழப்பு ஆகியவை அரிசி வயல்களின் நடுவில் அங்கும் இங்கும் மறைந்துவிடும் தங்கம் மற்றும் பார்லி நிச்சயமற்றதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு பழைய புத்தகத்தின் பக்கங்கள் வழியாக வேறு எங்காவது தேடியது வேறு எங்காவது தவறுதலாக அல்லது மறதி பற்றிய சில சாத்தியமற்ற அறிவால் மேகங்கள் குடைகளின் உச்சியில் மழை பெய்யும் வரை இழந்த தேவதூதர்களைப் போல விழும் நாணயங்களைத் தூக்கி எறிந்தன அவர்களின் சிறகுகள் நகை பிளிங் ஒளிரும் ஒளியைப் போல வெளிச்சம் உண்மையில் ஒளி அல்ல, ஆனால் மின்னல் அவர்களின் தாழ்மையான கருத்துக்களில் வெளிச்சத்தை விட மிகப் பெரியது மற்றும் கூர்மையானது, பணம் செலுத்திய கவனத்திற்கு செலுத்தப்படாதது விரைவில் அல்லது சிறிது நேரம் கழித்து மூலிகைகள் மற்றும் ஒரு சிகரெட் அல்லது இரண்டு நடுவில் தேயிலைக்குப் பிறகு செலுத்தப்பட விரும்பவில்லை. ஒரே புத்தகங்களை விரும்பும் நண்பர்களுடன் உரையாடல்

திங்கள், ஜூன் 22, 2015

சம்பாஷணைகள்

புரியாத ஒரு மொழியில் 
நடந்து கொண்டேயிருக்கிறது நம் உரையாடல் 
நான் சொல்வது உனக்குப் புரிவதில்லை 
நீ சொல்வதும் எனக்குப் புரிவதில்லை 
இப்படியாய் யார் சொல்வதும் யாருக்கும் 
புரியாமல் இருப்பதினாலேயே 
உயிருடனிருக்கிறது 
நமதான சம்பாஷணைகள் 

புதன், ஆகஸ்ட் 27, 2014

ஞாயிறு மதிய நேரம்


ஞாயிறு மதிய நேரம்
மைதானம் காலி
யாருமே இல்லை

இல்லாதவர்கள் யாருக்கும் தெரியாது
அவர்கள் மைதானத்தில் இல்லாதது
மைதானத்தில் யாரும் இல்லாததும்

மைதானத்துக்கு மட்டுமே தெரியும் -
யாரும் இல்லாததும்
வெறுமையும் பற்றி

போகும் பேருந்தில்
ஜன்னலோர இருக்கையில் நான்
காலியான மைதானம் பார்த்தவாறே
மைதானத்தில் இல்லாத எல்லோரையும் பார்த்தவாறே

பேருந்து போய்க்கொண்டே இருக்கிறது
யாருக்குமே தெரியாது
நான் இருப்பது பற்றி -
மைதானம், இல்லாத எல்லோரும், இருக்கும் மரங்கள்

எதற்கும் எவருக்கும் தெரியாது
போய்க்கொண்டிருக்கும் பேருந்தின்
ஜன்னலோர இருக்கையில் இருந்தவாறே
ஏதும் இல்லாமையை உணரும்
ஒரு பார்வையாளன் பற்றியும்

திங்கள், மே 13, 2013

கணக்குகள்


நாம் இன்றைக்கு இரவாய்
எழுதிய கணக்குகள்
தீர்த்துக் கொள்வோம்

எழுதாத கணக்குகள்
தம்மைத் தாமே
சரி பார்த்தும், தீர்த்தும்
கொள்ளும்

அது வரை நமக்கு
ஆசுவாசம் -
நாளைக்கு விடியல் வரையாய்

ஞாயிறு, ஜூலை 31, 2011

தாண்டவம்

இருள் நிரப்பும் ஜன்னலின் அருகே
பொருளற்ற நிலைப்பயனாய் அவன் கட்டில்
வெள்ளி ஒளி நிரப்பும் நிலாவுடன்
சற்றுத் தொலைவில் சில பிறவாக் கனவுகள்

நிலாவில் ஒரு காலும் அவன் விலாவில்
ஒரு காலுமாய்
ஆனந்த சக்தியின் தாண்டவம்
இன்றிரவும் நேற்றைப் போலவே

வியாழன், செப்டம்பர் 16, 2010

ஒளி

நிலாவின் நிழல் படர்ந்ததில்
பறி போனதோ பாதி சூரியன்

பாதி சூரியன் பறி போனதில்
பார்வைக்குப் பிறந்து வந்தது இலை
மீதொளிர்ந்த தெரு விளக்கொளி

ஒளி போனதில் வந்த ஒளியும்
ஒளி போல் அழகாகவே...

புதன், செப்டம்பர் 15, 2010

சாராதிருத்தல்

மழையும் மேகமும் தனித்தனியாயிருப்பினும்
ஒன்றுக்கொன்று சாராதனவல்ல
காற்றும் இலைகளும் தனித்தனியாயினும்
காற்று விளை அசைவிலேயே இலைகள் பொருள் கொள்கின்றன
அகமும் புறமும் தனித்தனியேயாயினும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதில்லை
தெரிந்ததும், தெரிந்தே தெரியாதனவும் தனியாயிருப்பினும்
இரண்டும் இணைந்தே பொருள் பெறுகின்றன
சாராதிருத்தல் பற்றிப் பேசும்போதெல்லாம்
சார்ந்திருத்தலை முழுதாய் அறிந்தே இருக்கிறோம்
இருப்பினும் அத்தனை எண்ண ஓட்டம் மொத்தமும்
ஒன்றுக்கொன்று சாராதிருப்பதாகவே படுகிறது

சனி, செப்டம்பர் 11, 2010

நாசமாப்போன நாலு வரி

எதாவது எழுதிப்புடணும்ன்னு தேடித் தேடிப் பாத்து முடிச்சா
பாடுபொருள் பஞ்சம் மட்டும் தான் மிச்சம் நிக்கிது
பாட்டு ஒண்ணும் புதுசாப் பொறந்துடல்லே
காணாத கனவும், நீண்டு நெளிஞ்ச நெழலுமாயும், இல்லாத இருப்பையும் பத்தி எழுதி எழுதி
பேனா மொனை தேஞ்சது தான் மிச்சம்

கட்டுக் கட்டாய் கறுப்பு மசி படிஞ்ச காயிதக் கட்டு
குளிர் காய எரிக்க மட்டுமே பிரயோசனம்
புதுசா எதாவது எழுதிப்புடணும்ன்னு நெனச்சு பேப்பரும் பேனாவுமாய் உக்காரும்போதெல்லாம் வந்து பொறந்திடும்
ஒரே மாதிரி, அதே மாதிரி, சுமாரான,
நாசமாப்போன நாலு வரி.

சனி, ஆகஸ்ட் 08, 2009

ரகசியங்கள்

நீர்ப்பரப்பின் மிக மெல்லிய சலனங்கள் திடீரென பொருள் கொள்கின்றன.
செல்லும் மென்காற்றின் நெய்த புத்தம் புது கனவுகள்: 
நமக்காக விட்டுச்சென்ற குறிப்புகளும் உணர ஏங்கிய ரகசியங்களுமாய். 
நமைச்சுற்றி நிரப்பும் நிலவொளி. 
வெள்ளி நீர்ப்பரப்பில் நமதான ரகசியங்களின் காலடியோசைகளின் எதிரொலியில் - 
நம் காதுகளின் உள்ளே புது ரகசியங்களின் ரீங்காரம்!

சனி, பிப்ரவரி 21, 2009

பூனைகள்

பொதுவாகவே எனக்கு எப்போதுமே பூனைகளை பிடித்ததில்லை
நான் படித்துப்பார்க்கும் எல்லோருக்கும் 
நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் போதலேருக்கும் 
முராகாமிக்கும் பாரதியாருக்கும் 
எல்லோருக்கும் பூனைகளைப் பிடித்திருக்கிறது 
எனக்கோ அவ்வளவாக பூனைகளைப் பிடிப்பதில்லை 
இத்தனையும் படிக்கையிலே 
எனக்கும் பூனைகளை 
பிடித்துப் போய் விடவேண்டும் போலவே இருக்கிறது ஆயினும் 
என்னால் எனக்கு பூனைகளை பிடிக்க வைக்க
முடியவில்லை

செவ்வாய், அக்டோபர் 28, 2008

சாம்பல் நிற சிறு மேகம்

இந்த தீபாவளி இரவில்
இருள் வானின் உயரே சென்று
வெடித்து வெளிச்ச சிதறல்கள் பரப்புகின்றன
வாண வேடிக்கைகள்
இறுதியில் மீந்து இருப்பது
வானில் ஒரு சிறிய சாம்பல் நிற
காளான் வடிவொத்த ஒரு
சிறு மேகம் மட்டுமே
எப்போதும் எனக்கு
வாண வேடிக்கைகளை விட
அந்த சாம்பல் வண்ண சிறு மேகங்கள்
ரொம்பவும் அழகாகவே தோன்றுகின்றன...

செவ்வாய், செப்டம்பர் 30, 2008

எனது

இத்தனை நாட்களாய் தணியாத குழப்பம்

எனது எது, எனதல்லது எது

நில்லாது தேடித் திரிகிறேன்



எனது எதுவென்று புரிவதற்குள்

அது எனதல்லதாகி விடுகிறது

நான் எனதானவனா?

என் வாழ்க்கை எனதானதா?

நான் வாழ்ந்து கழித்திருக்கும் இத்தனை நாட்களும்

எனதானவையா?



இத்தனை குழப்பங்களும் இப்படியே இருக்க,

எனது முடிவு மட்டும் எனதாயிருக்குமோ?

அதன் பின்னே எனக்கு அது

புரிந்ததாய் இருக்குமோ?



இத்தனை காலம் வாழ்ந்து முடித்தும்

தணியவே தணியாத இந்தக் குழப்பம்...

சனி, செப்டம்பர் 06, 2008

நீச்சல்

சற்றுத் தொலைவில் தெரியும் கரை
நீச்சலுக்கு உறு துணையாய் அலைகள்
ஒளியால் கை காட்டி திசை உணர்த்தும்
கலங்கரை விளக்கம்
மனமெல்லாம் மகிழ்வு
வானெல்லாம் விண்மீன்கள்
வேறென்ன வேண்டும் கரை சேருதற்கு?
இத்தனை இருக்க
கரை சேருதல் அன்றி
வேறொரு வழியும் உண்டோ?

வெள்ளி, செப்டம்பர் 05, 2008

தத்தோம் தீம் தோம்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்

நர்த்தன ஈசனின் தாளக்கட்டும்
தூரத்து இடியும்
நாட்டிய ஜதியும்
எதிரொலியாய் என் குளியலறைக்குள்
அடித்து துணி துவைக்கையிலே
காதாற நான் கேட்டேன்

தத்தோம் தீம் தோம்
தரிகிட தோம்

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

சாத்தானின் இரட்டைக் கொம்புகளில்
சத்தமின்றி சந்தம் பயின்று

ஆய்த எழுத்தில்
தலை கீழாய் கருத்தொருமித்த
ஏராளக் கணங்களில்

உயர் மெய், உயிர் மெய்யில்
நினைவு நிறுத்தி
துணை எழுத்தாய் மெய் எழுத்து தேடி

அங்கும் இங்கும் பார்த்து நிற்கையிலே
மாறுகிறேன் நான்

ஒரு
ஒற்றைக்கொம்பு
காண்டாமிருகமாய்...

திங்கள், ஆகஸ்ட் 25, 2008

புத்தகங்கள்

சென்னையில் வந்து தங்கி இருப்பதுவும் கையில் ஆயிரம் ரூபாய்க்கு பரிசாய்க் கிடைத்த புத்தகக் காசோலை இருந்ததாலும் கிட்டத்தட்ட இருபது புத்தகங்கள் வாங்க முடிந்தது.
ஆஹா வேறென்ன வேண்டும் - விடுமுறை + வேண்டிய அளவு புத்தகங்கள் = விரும்பிய வண்ணம் வாழ்வு!

திங்கள், ஆகஸ்ட் 18, 2008

நிலை

இருள் தாண்டி தேடிப் பார்க்கையிலே
எதுவுமே தெரியலியே
இருட்டுக்குழாயின் எதிர்முனையிலே
இருக்குதொரு ரத்தினச்சுடருன்னு
சொன்னதெல்லாம் நெசமில்லையோ
நம்பிக்கையில் நியாயமில்லையோ?

உத்து உத்து பாக்கையிலே
எல்லாம் தெரிஞ்சிது
அடடா இது தானே வேணுமின்னு
இத்தனை நாளா ஏங்கித் தவங்கிடந்தேன்
இன்னிக்கு என் முன்னே இது வந்து நிக்கயிலே
இல்லேன்னு எப்படி நெனைக்கப் போனேன்?

நல்ல வேளை இப்பவே
கண் முழிச்சேன்
நாளைக்குன்னா நடந்தே முடிஞ்சிருக்கும்
நெனைக்காத எல்லாமும்!

சனி, ஆகஸ்ட் 16, 2008

யாருமற்ற ஞாயிறு

யாருமற்ற ஞாயிறு
எனதல்ல என்றிருக்கையில்
மனதில் பொதிந்த மெட்டுக்களின்
எதிரொலி விளை பலனாய்
எனதே எனதான
மற்றொரு புது நாள்

வியாழன், ஆகஸ்ட் 14, 2008

நிழல்

நான் நீண்டு நிலம் சாய

என் நிழல் நிமிர்ந்து

நிஜமாய் மாறி

ஒரு குழப்பக் கணத்தில்

நிஜம் கண்டோம்

நானும் நிழலும்!

புதன், ஆகஸ்ட் 13, 2008

மின்னல்

(1)
வாயிற்படியில்,
இல்லாத அழைப்பு மணியில்
விரல்கள் பதித்து அழுத்தியவாறே
நிறைந்து நின்றிருந்த மின்னல் ஒன்று
எனது வருகைக்குக் காத்து நின்று
நான் வந்த பின் சென்று மறைந்த மாயம்
யாரும் சொல்லிப் புரியவில்லை
யாரிடம் கேட்டும் தெரியவில்லை
(2)
இங்குள்ளோர் எல்லாரும் எல்லாமும் தெரிந்த நிலை ஒன்றைத்
தமக்காக்கிக் கொண்டமையால்
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்ததாய் ஒரு மாயை
ஊடுருவியே கிடக்கிறது
நடுவே வந்து அவர்கள் காணாத மின்னலும்
அவர்கள் அறிவுக்கு மிக அற்பமே
பேசுவதற்கும் கேலி சிரிப்பதற்கும் இன்றைக்கு
இந்த மின்னல் போதுமே

நிறுத்தம்

துளித்துளியாய்ப் பரவி, திரவ நிலை தாண்டி
அங்கிருந்து அப்படியே ஆவியாய் நிறைந்து
பொடிப்பொடியாய் துகள்துகளாய்
தனித்த நிலை நீங்கி
தான் மறந்த நிலை தேடி
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய்
பறந்து திரியும் பற்பல நிலைகளின் நடுவில்
சற்றே நின்று இறகு மடித்து இளைப்பாற
இங்கே ஒரு நிறுத்தம்