எதாவது எழுதிப்புடணும்ன்னு தேடித் தேடிப் பாத்து முடிச்சா
பாடுபொருள் பஞ்சம் மட்டும் தான் மிச்சம் நிக்கிது
பாட்டு ஒண்ணும் புதுசாப் பொறந்துடல்லே
காணாத கனவும், நீண்டு நெளிஞ்ச நெழலுமாயும், இல்லாத இருப்பையும் பத்தி எழுதி எழுதி
பேனா மொனை தேஞ்சது தான் மிச்சம்
கட்டுக் கட்டாய் கறுப்பு மசி படிஞ்ச காயிதக் கட்டு
குளிர் காய எரிக்க மட்டுமே பிரயோசனம்
புதுசா எதாவது எழுதிப்புடணும்ன்னு நெனச்சு பேப்பரும் பேனாவுமாய் உக்காரும்போதெல்லாம் வந்து பொறந்திடும்
ஒரே மாதிரி, அதே மாதிரி, சுமாரான,
நாசமாப்போன நாலு வரி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக