இருள் தாண்டி தேடிப் பார்க்கையிலே
எதுவுமே தெரியலியே
இருட்டுக்குழாயின் எதிர்முனையிலே
இருக்குதொரு ரத்தினச்சுடருன்னு
சொன்னதெல்லாம் நெசமில்லையோ
நம்பிக்கையில் நியாயமில்லையோ?
உத்து உத்து பாக்கையிலே
எல்லாம் தெரிஞ்சிது
அடடா இது தானே வேணுமின்னு
இத்தனை நாளா ஏங்கித் தவங்கிடந்தேன்
இன்னிக்கு என் முன்னே இது வந்து நிக்கயிலே
இல்லேன்னு எப்படி நெனைக்கப் போனேன்?
நல்ல வேளை இப்பவே
கண் முழிச்சேன்
நாளைக்குன்னா நடந்தே முடிஞ்சிருக்கும்
நெனைக்காத எல்லாமும்!
திங்கள், ஆகஸ்ட் 18, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
//
நாளைக்குன்னா நடந்தே முடிஞ்சிருக்கும்
நெனைக்காத எல்லாமும்!
//
வாழ்க்கையின் சுவாரசியமே அது தானே.
தமிழ் பதிவுலகிற்கு வருக. நல்ல பல படைப்புகளை தருக.
கருத்துரையிடுக