ஞாயிறு மதிய நேரம்
மைதானம் காலி
யாருமே இல்லை
இல்லாதவர்கள் யாருக்கும் தெரியாது
அவர்கள் மைதானத்தில் இல்லாதது
மைதானத்தில் யாரும் இல்லாததும்
மைதானத்துக்கு மட்டுமே தெரியும் -
யாரும் இல்லாததும்
வெறுமையும் பற்றி
போகும் பேருந்தில்
ஜன்னலோர இருக்கையில் நான்
காலியான மைதானம் பார்த்தவாறே
மைதானத்தில் இல்லாத எல்லோரையும் பார்த்தவாறே
பேருந்து போய்க்கொண்டே இருக்கிறது
யாருக்குமே தெரியாது
நான் இருப்பது பற்றி -
மைதானம், இல்லாத எல்லோரும், இருக்கும் மரங்கள்
எதற்கும் எவருக்கும் தெரியாது
போய்க்கொண்டிருக்கும் பேருந்தின்
ஜன்னலோர இருக்கையில் இருந்தவாறே
ஏதும் இல்லாமையை உணரும்
ஒரு பார்வையாளன் பற்றியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக